நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 7 April 2018

demo-image

நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்!

UdRNXUg

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே கூட்டு எதிர்க் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்ததாகவும் கூட்டாட்சியில் சர்ச்சைகள் உருவாகாமலிருக்க தாம் விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சு.க அமைச்சர்கள் குழு.


இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குறித்த நபர்களுக்கு எதிராகக் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆயினும், 2020ல் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என கட்சி மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதோடு தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment