ஒரு நாட்டின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையென்பது மிகவும் முக்கியமானதும், ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என்கின்ற போதிலும் இம்முறை அதனைக் கொண்டு வந்த கூட்டு எதிர்க்கட்சியினரை அதை நகைச்சுவையாக மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார் நா.உறுப்பினர் சுமந்திரன்.
கூட்டாட்சி அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதன் விளைவிலேயே குழப்பங்கள் உருவாகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்பில் தெளிவாகப் பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்களாலேயே முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment