அமெரிக்க ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படும்: ரஷ்யா சூளுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

அமெரிக்க ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படும்: ரஷ்யா சூளுரை!


சிரியாவை மையமாகக் கொண்டு ரஷ்யா - அமெரிக்கா இடையே வலுத்து வரும் போர்க்குரலின் அடுத்த கட்டமாக அமெரிக்கா தாக்குதல் நடாத்துமாக இருந்தால் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதோடு தாக்குதல் தளங்களையும் அழிக்கப் போவதாக எச்சரித்துள்ளது ரஷ்யா.



ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ரஷ்யா வீட்டோ செய்திருக்கும் அதேவேளை ரஷ்யாவினால் முன் வைக்கப்பட்ட பிரேரணையும் தோல்வியடைந்துள்ளது.

சிரியாவில் இரசாயன தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக மேற்குலகம் 'தெரிவிப்பதன்' அல்லது சந்தேகப்படுவதன் அடிப்படையில் அந்நாடு மீது தாக்குதல் நடாத்துவதை அனுமதிக்கப் போவதில்லையென ரஷ்யா சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment