ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அக்கட்சியின் தொழிற்சங்கம் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அதன் பிரதான இலக்கு மைத்ரிபால சிறிசேன என அரசியல் அரங்கில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கண்டுள்ள போதிலும் மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ளமையும் ஏலவே மஹிந்த தலைமையில் இன்னொரு அணி இயங்குகின்றமையும் இந்நிலையில் இவ்வருடம் மே தினக் கொண்டாட்டம் ஏழாம் திகதியே இடம்பெற ஏற்பாடாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment