பிராந்திய பாதுகாப்பு, இராணுவம், சமூகம் உட்பட பல்வேறு துறைகளில் சவுதியும் அமெரிக்காவும் ஒரே சிந்தனைப் போக்கிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அல் ஜுபைர்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் பொம்பே தற்போது சவுதி விஜயம் செய்துள்ளதுடன் இரு நாட்டு கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் சவுதி சென்று திரும்பிய பின்னரே கட்டாருடன் முறுகல் தோன்றியிருந்தமையும் தற்போது ஒரு வருடம் தாண்டியும் பிணக்குகள் தீர்க்கப்படாமலிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment