இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணையின் போது நாடாளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி மறுத்தமை அறிவுபூர்வமான நடவடிக்கையென சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச.
தொலைக்காட்சி நேரலையில் மக்கள் பார்ப்பதைத் தவிர்க்க முடியாவிட்டாலும் சபைக்குள் வந்து அங்கு இடம்பெறும் அநாகரிகங்களை மாணவர்கள் பார்க்காமலிருப்பது நல்லதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட கரு ஜயசூரிய, இன்று 'வயது வந்தவர்கள் மாத்திரமே' நாடாளுமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment