கொரிய அதிபர்கள் இருவரும் நேரடி சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 27 April 2018

கொரிய அதிபர்கள் இருவரும் நேரடி சந்திப்பு!


திட்டமிட்டபடி தென் கொரியாவுக்குள் சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் அந்நாட்டின் ஜனாதிபதி மூனை நேரடியாக சந்தித்துக் கை குலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


சில வாரங்களுக்கு முன்பு வரை யுத்த மேகம் சூழ்ந்திருந்த கொரிய பிராந்தியத்தில் தற்போது அமைதி நிலவி வருகிறது.

ஒரு புறத்தில் கிம் - மூன் பேச்சுவார்த்தை, மறுபுறத்தில் கிம் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையென வடகொரியா சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணு ஆயுதம் கொண்டு தாக்கும் வல்லமையைத் தாம் பெற்றிருப்பதை வட கொரியா நிரூபித்த பின்னரே நிலைமை மாறியுள்ளமையும் 1954ன் பின் முதற்தடவையாக வடகொரிய அதிபர் ஒருவர் தென் கொரியா விஜயம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment