கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் எவ்வித முன்னேற்றமும் இன்றியும் கட்டிடங்கள் உடைந்த நிலையிலும் திருத்த வேலைகளை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் உத்தரவு வழங்கப்பட்டும் புறக்கணிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் சுமார் 150 மாணவர்களுடன் 9ம் ஆண்டுவரை கல்வி கற்பிக்கும் வசதியிருந்தும் கூட தற்போது 70 மாணவர்கள் அளவிலிலேயே அங்கு கல்வி கற்பதாகவும் 5ம் ஆண்டு வரையான வகுப்புகளே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு சொந்தமான கட்டிடங்கள் பல உடைந்து ஆபத்தான நிலையில் கானப்படுவதாகவும் இது தொடர்பில் 2017 ம் ஆண்டு தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்து அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாரு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் கொடுத்திருந்த போதும் இது வரை பாடசாலையில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெற வில்லை என்றும் பாடசாலையின் அபிவிருத்திக்காக பாடுபடும் ஜே.சஹாப்தீன் தெரிவித்தார்.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment