ரணில் விக்கிரமசிங்கவின் ராசி பலன் நன்கு வேலை செய்வதாகவும் அவரை இனியும் பதவியிலிருந்து துரத்த முடியாது எனவும் தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே.
நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கியதுதான் ஈற்றில் அவர்கள் சாதித்துக் கொண்ட விடயம் எனவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலசுகட்சியின் 16 பேர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்த போதிலும் ஏனையோர் தவிர்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment