கிளிநொச்சி 55ம் கட்டை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டிடம் ஒன்று நேற்று(27) திறந்துவைக்கப்பட்டது.
பள்ளிவாசல் நிர்வாகசபையினரின் வேண்டுகோளிற்கு இணங்க மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணிஊடாக குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டிருந்ததுடன் ஜும்மா தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை தலைவரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கே.எம் நிலாமினால் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை உறுப்பிகர்கள் யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம் பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி பள்ளிவாசல் மஹல்லாவில் சுமார் 15 குடும்பங்கள் வசித்துவருவதுடன் முஸ்லிம் மக்கள் மீள் குடியமர்வதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன .
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment