'இல்லை'; தமிழில் வாக்களித்து 'திரும்பிப் பார்க்க வைத்த' சுஜீவ! - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 April 2018

'இல்லை'; தமிழில் வாக்களித்து 'திரும்பிப் பார்க்க வைத்த' சுஜீவ!


ஒரு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர பெரும்பாலானோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான எதிர்ப்பைத் தெரிவிக்க 'விருத்தய்' என சிங்களத்திலேயே தமது வாக்கைப் பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் சுஜீவ சேனசிங்க 'இல்லை' என தமிழில் தெரிவித்து சபையில் சிரிப்பொலியை உருவாக்கியிருந்தார்.



மனோ கணேசன் தமிழில் இல்லையென தெரிவித்திருந்ததனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமிழிலேயே பதிலளித்தனர்.

எனினும், தொடர்ச்சியாக விருத்தய் என கேட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் சுஜீவவின் 'இல்லை' அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment