ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வருடம் ஜுலை மாதம் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் நாடாளுமன்றம் நுழைவதற்கு ஆயுட்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம்.
பனாமா ஊழல் தகவல்களின் அடிப்படையில் உருவான சர்ச்சையினால் நவாஸ் ஷரீப் பதவியிழக்க நேரிட்டிருந்தது. இந்நிலையிலேயே ஐந்து பேர் கொண்ட விசேட நீதிபதிகள் குழு இன்று இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மூன்று முறை பிரதமர் பதவி வகித்த நவாஸ் ஷரீப் உட்பட பெரும்பாலான பாக். பிரதமர்கள் ஊழல் குற்சச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment