குரூப் 16 தாம் அரசிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில் ஆறு கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகளும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை அறிவிப்பின் போது சுதந்திரக் கட்சியிலிருந்தே இதற்கான நியமனங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை எதிர்காலத்தில் தனியாட்சியை நிறுவும் வண்ணம் இப்போதிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் பயணிக்க வேண்டும் எனவும் அக்கட்சி மட்டத்தில் குரல் எழுப்பப் பட்டு வருகிறது.
எனினும், 2020 வரை கூட்டாட்சியே தொடரும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment