யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கி தப்பி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (30) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் திடிரென அத்துமீறி நுழைந்த குழு ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன் அவரை வாளால் வெட்டியுள்ளது. அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் வாளால் வெட்டிக்காயப்படுத்திய பின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதன் பின்னர் காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது
மேலும் குறித்த வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் தப்பி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் புங்குடுதீவு பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் 37 வயதினை உடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-Farook Sihan
-Farook Sihan
No comments:
Post a Comment