ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக மீள் கட்டமைப்புக்கென பிரத்யேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குழு தனது செயற்பாட்டில் நெறி தவறினால் தான் முடிவெடுக்கத் தயங்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலிருந்து ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க உட்பட்ட குழுவினர் பின் தம் கட்சித் தலைமையைக் காப்பாற்றுவதற்குக் கை கேர்த்து எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
பிரேரணையையடுத்து கட்சி நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் வரும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ரணிலே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் என நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ள பிரத்யேக குழு ஏனைய பொறுப்புகளுக்கான முன்மொழிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனையும் மீறி நெறி தவறினால் தாம் முடிவெடுக்கத் தயங்கப் போவதில்லையெனவும் கட்சி இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment