தங்க இறக்குமதிக்கு அண்மையில் 15 வீத வரி அறவீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனி கள்ளக் கடத்தல் அதிகரிக்கும் என நா.உ பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், வரி விலக்கு இருந்த காலத்தில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு ஏற்றுமதி இருக்கவில்லையெனவும் வரி விலக்கு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், வரி விலக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை குறையவோ, ஆபரண தயாரிப்பு அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி கண்டதாகவோ எந்தவித புள்ளிவிபரங்கள் இல்லையெனவும் இறக்குமதி செய்யப்படும் தங்கம் நாட்டிற்குள்ளேயே தங்கி விடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முதல் 3 மாதங்களில் மாத்திரம் 8360 கிலோ கிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதேவேளை 2016ம் ஆண்டு மொத்தமாக 9148 கிலோவும் 2017ம் ஆண்டு 15757 கிலோவுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment