அரசைக் காப்பாற்ற ஒத்துழைத்து இயங்கி வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான கூட்டசே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க.
துமிந்த திசாநாயக்க உட்பட சு.க தரப்பும் இரு கட்சிகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட கூட்டாட்சி 2020 வரை தொடர வேண்டும் என தெரிவித்து வருகின்ற நிலையில் ஐ.தே.கட்சியின் முக்கிய பிரமுகரான ரவி கருணாநாயக்கவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி - பிரதமர் இது தொடர்பில் தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை 2020 வரை இரு கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment