ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி காலியானால் அப்பதவிக்குத் தானே பொறுத்தமானவர் எனும் நம்பிக்கையில் பதவியேற்புக்கும் தயாராகி வந்த நிமல் சிறிபால டிசில்வா கடுமையான மன உளைச்சலோடு வெளிநாடு சென்றுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னும் பதவியேற்பை வெகுவாக எதிர்பார்த்து தனது ஆதரவாளர்களைத் தயாராகும்படி தெரிவித்திருந்த நிமல், நம்பிக்கையில்லா பிரேணையின் மூலமாவது அப்பதவியில் அமரலாம் எனும் நம்பிக்கையூட்டப்பட்டவராக எதிர்பார்த்திருந்தார்.
எனினும், வாக்கெடுப்பு நாளன்று தமது கட்சியினரே நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நிலையில் மனமுடைந்த நிலையிலேயே நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்த நிமல் சிறிபால வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போதும் மஹிந்த ராஜபக்சவுக்கு தான் விட்டுக்கொடுத்து அவரை முன்நிறுத்துவதாக நிமல் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment