அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 23 April 2018

அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு



கண்டி, திகன பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன விரோதத்தைத் தூண்டி பேரழிவுகளை உருவாக்கிய மஹசோன் பலகாய என்ற இனவாத அமைப்பின் தலைவன் அமித் வீரசிங்க உட்பட்ட்ட குழுவினரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களது விளக்கமறியல் மே 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


திகன பகுதியில் சுயாதீனமாக இயங்கி வந்த குறித்த நபரின் நடவடிக்கைகள் குறித்து அசமந்தப் போக்கில் இருந்த பொலிசார் சம்பவத்தின் பின்னரே கைது செய்திருந்தமையும் தம்மைக் கைது செய்த 'பொலிசார்' கொந்தராத்துக்காரர்கள் என அமித் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment