கண்டி மாநகர சபையின் மேயராக திறந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேசர சேனாநாயக்க தெரிவாகியுள்ளதோடு பிரதி மேயராக துவான் இலாஹி ஆப்தீன் தெரிவாகியுள்ளார்.
ஐந்து பேர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்ட நிலையில் பெரமுன போட்டியாளர்களை விட நான்கு மேலதிக வாக்குகளைப் பெற்று குறித்த நபர்கள் மேயர் மற்றும் பிரதிமேயராக நியமனம் பெற்றுள்ளனர்.
கண்டி மாநகர சபையில் இம்முறை, முஸ்லிம் பெண்ணொருவர் உட்பட ஒன்பது பெண்கள் அங்கம் வகிக்கின்றமை சிறப்பம்சமாகும்.
-ஜே.எம்.ஹபீஸ்
No comments:
Post a Comment