நாடாளுமன்றத்தின் அடுத்த தவணை ஆரம்பித்ததும் முதற் பணியாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
பிரதமர் பதவி, ஆட்சிக் கவிழ்ப்பு என எதுவும் கை கூடாத நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்துள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் இதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஸ்ரீலசுகட்சியின் அனைவரும் இணைந்து வாக்களித்திருந்தாலும் பிரதமர் ரணிலுக்கு எதிரான பிரேரணையை வென்றிருக்க முடியாது என சு.க தரப்பு தற்போது விளக்கமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment