சவுதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கிறது இலங்கை சுற்றுலாத்துறை.
சுமார் 20 பேர் கொண்ட குழுவொன்று இதற்கென பிரத்யேகமாக அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்த அதேவேளை, தமாம், ரியாத் உட்பட முக்கிய நகரங்களில் சந்தைப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே தமது நடவடிக்கைகள் வெற்றி பெற்றிருப்பதாகவும் கடந்த வருடம் 35,481 சவுதி சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தததாகவும் இவ்வருடம் அது அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment