ஊடகவியலாளர் கீத் நேயார் கடத்தில் விவகாரத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் இராவுண புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
2008 மே மாதம் 22ம் திகதி கடத்தப்பட்ட குறித்த நபர் மறுநாள் பலத்த காயங்களுடன் அவரது வீட்டின் முன் வீசப்பட்டிருந்தார்.
மஹிந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment