அதிகார வெறி பிடித்தவர்களால் நாடு பின் தங்கியுள்ளது: கரு - sonakar.com

Post Top Ad

Monday, 9 April 2018

அதிகார வெறி பிடித்தவர்களால் நாடு பின் தங்கியுள்ளது: கரு



பணத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களின் தொடர்ச்சியில் அதிகார வெறியினால் நாட்டுக்குத் துரோகமிழைப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், 1948ல் இலங்கை சுதந்திரமடைந்த போது ஜப்பானுடைய பொருளாதாரமும் இலங்கையின் பொருளாதார சூழ்நிலையும் ஒரே நிலையிலேயே இருந்ததாகவும் இன்று ஜப்பான் எங்கோ சென்று விட்ட போதிலும் இலங்கை மிகவும் பின் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் பணம் கை மாற்றப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்ற அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் தலா 75 கோடி பெற்றதாக விஜேதாச ராஜபக்சவின் புதல்வர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க வேண்டும் என பிரதியமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment