மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான பெர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி பலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தேடப்படும் நிலையில் குறித்த இருவரது விளக்கமறியலும் மே 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment