ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீலசுக உறுப்பினர்களை வாக்களிக்கத் தூண்டியது மைத்ரிபால சிறிசேன தான் என தெரிவித்துள்ள தம்பர அமில தேரர், மைத்ரி தனது இரட்டை வேடத்தைக் களைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காலை வாரும் செயலை மைத்ரி நிறுத்திக் கொள்ளாவிட்டால் தாம் ஜனாதிபதி இல்லம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நேரிடும் எனவும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ரணில் - மைத்ரியிடையே சுமுகமான சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் சு.க தரப்பிலிருந்து பிரேரணையை ஆதரித்தவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் வாபஸ் பெறுமாறு ரணில் தமது கட்சிக் காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment