நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்து அதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபிக்கவும் ஒற்றுமையை நிலை நாட்டவும் உதவி புரிந்த உதய கம்மன்பிலவுக்கு பரிசாக அமைச்சர் பதவியொன்றை வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
பிரேரணையில் ஆகக்குறைந்தது ஏழு வாக்குகளால் ரணில் தோற்கடிக்கப்படுவார் என கம்மன்பில தெரிவித்து வந்தார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஹிருனிகாவும் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்ததன் பின் கட்சி மாறிய நிலையில் அரசை கடுமையாக அவர் விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதில் மும்முரமாக இயங்கிய கம்மன்பிலவுக்கு நன்றிக்கடனுள்ளாக இருப்பேன் என வாக்கெடுப்பின் பின் கேலி செய்திருந்த பிரதமர் அவருக்கு அமைச்சுப் பதவியொன்றை பரிசாக வழங்க விரும்புவதாக மஹிந்தவிடம் தெரிவிக்க, மஹிந்த ராஜபக்ச ரணிலின் தோளைத் தொட்டு சிரித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment