மீண்டும் சவுதி நோக்கி ஏவுகணை தாக்குதல்; வானில் தாக்கியழிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 20 April 2018

மீண்டும் சவுதி நோக்கி ஏவுகணை தாக்குதல்; வானில் தாக்கியழிப்பு!


யெமனில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் பலவீனமடைந்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை சவுதி அரேபியா ஜசான் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையொன்று வானில் வைத்தி தாக்கியழிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



யெமன், அம்ரான் பகுதியிலிருந்து ஏவுகணை புறப்பட்டதை அவதானித்த சவுதி விமானப்படை துரிதமாக செயற்பட்டு ஏவுகணையை தாக்கியழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா ஈரான் மீதே குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment