ரவுப் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தொடர்ந்து ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த அணியோடு கை கோர்த்துள்ளது.
குளியாபிட்டிய பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே இந்த கூட்டு இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.சி இர்பானுக்கு பிரதித் தவிசாளர் பதவி தரப்பட்டிருப்பதாக அக்கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையில் 02 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் இவ்வாறு அரசியல் கூட்டு மலர்ந்திருக்கின்றமையும் ரவுப் ஹக்கீம் ஏலவே தாம் பண்டமாற்று அடிப்படையில் கூட்டு சேர்ந்ததை விளக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment