ஐக்கிய தேசியக் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் கட்சியை அழிக்க முனைபவர்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த தேர்தலில் கூட கட்சி வெல்வதை விட பின்னடைவதை விரும்பியவர்களே பலர் ஒன்று சேர்ந்து மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து வருவதாகவும் அவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லையெனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதி மற்றும் உதவித் தலைவர்களுக்கு மேலும் அதிகாரங்களைக் கொடுத்து அவர்கள் ஊடாக கட்சியை மீள்கட்டமைக்கும் பணியைத் தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment