பரபரப்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படாதமை குறித்து விளக்கமளித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித.
அவரது விளக்கத்தின் படி, உதயங்க அமீரகத்தில் செய்த 'குற்றச்செயலுக்காக' அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, அதற்குரிய தண்டனை அல்லது நடவடிக்கை குறித்து அந்நாட்டு நீதிமன்றமே தீர்மானிக்கும்.
இதேவேளை, சர்வதேச பொலிஸ் வலையமைப்பின் ஊடான புரிந்துணர்வின் அடிப்படையில் இலங்கையில் தேடப்பட்டு வரும் உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உத்தியோகபூர்வ ரீதியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரமும் அமீரகத்துக்கே இருப்பதனால் அங்கிருந்து தகவல் கிடைக்கும் வரையே காத்திருப்பதாகவும் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக தேடப்பட்டு வரும் உதயங்க, அமெரிக்கா செல்லும் வழியில் அமீரகத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment