வெலிகம: துப்பாக்கியை காணவில்லை; இரு பொலிசார் இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Friday, 6 April 2018

வெலிகம: துப்பாக்கியை காணவில்லை; இரு பொலிசார் இடை நிறுத்தம்



வெலிகம பொலிஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கியொன்று காணாமல் போயுள்ளதன் பின்னணியில் அங்கு கடமையாற்றும் இரு கான்ஸ்டபிள் தர பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.



விசாரணைக்காக சென்று வந்த நிலையில் ஆயுதத்தை தொலைத்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை இருவர் மீதும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் பாதாள உலக கோஷ்டியின் துப்பாக்கி சண்டைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment