ஐ.தே. கட்சி தலைமையகத்துக்கு பொறுப்பாளிகளாக மூவர் நியமனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 23 April 2018

ஐ.தே. கட்சி தலைமையகத்துக்கு பொறுப்பாளிகளாக மூவர் நியமனம்!


ஐக்கிய தேசியக் கட்சி தமது நிர்வாக மட்ட மாற்றங்களை அறிவித்து வரும் நிலையில் தலைமையகத்தின் பொறுப்பை மூவரிடம் கையளிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



தலைமையகத்தின் செயற்பாடுகளை மூன்றாகப் பிரித்து, கட்சி செயலாளர், தேசிய அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் பதவிகளை வகிப்போரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைப் பதவியில் மாற்றம் 'தற்போதைக்கு' மாற்றம் அவசியமில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ள போதிலும் தலைமை மாற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment