கடந்த வருடம் ஓகஸ்ட் - செப்டம்பர் காலப்பகுதியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யர்கள் பங்களதேஷ் எல்லையில் தஞ்சம் புக நிர்ப்பந்தித்துத் படுகொலைகளை அரங்கேற்றிய மியன்மார் அரசாங்கம் தற்போது சர்வதேசத்தைத் திருப்திப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் பின்னணியில் பங்களதேஷில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யர்களிலிருந்து ஒரு குடும்பத்தை அழைத்து வந்து மீளக் குடியமர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் குறித்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னணியில் தமது இராணுவத்தினருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாகவும் மியன்மார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment