பொது வேட்பாளரை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அமெரிக்கா சென்று தங்கியிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பிய நிலையில் இலங்கை அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய செயற் திட்டத்தை உருவாக்கியிருந்தார் ரணில் விக்கிரமசிங்க.
அமெரிக்காவில் பெற்ற பயிற்சியின் பின் பல கட்சிகளுடன் கூட்டிணைந்து மஹிந்த ராஜபக்சவை பதவி கவிழ்ப்பதில் வெற்றி கண்ட ரணில், அண்மையில் தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் வெற்றி கண்டார்.
இந்நிலையில், 2020 அல்லது 2025ல் ஜனாதிபதியாக வேண்டும் எனும் கனவோடு அரசியலில் நிலைத்திருக்கும் சம்பிக்க ரணவக்கவும் அமெரிக்காவில் பயிற்சி நெறியொன்றுக்கு சென்றிருப்பதாக விமல் வீரவன்ச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு வார கால விசேட பயிற்சி நெறிக்காக சென்றிருக்கும் சம்பிக்க, அங்கு பல்கலைக்கழக நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே சென்றுள்ளதாக இலங்கையில் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய ஊடாக ஆட்சியைப் பிடிப்பதில் குறியாக இருந்த சம்பிக்க, பிற்காலத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து தன்னை வளர்த்துக் கொண்ட அதேவேளை இனவாதத்தைத் தூண்டி விடுவதிலும் பங்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment