பாதுக்க பகுதியில் மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்தி தனியார் வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திய தமிழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஏலவே மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பாதுக்க பகுதியில் முன்னர் இயங்கி வந்த சிகிச்சை நிலையம் ஒன்றை வாடகைக்குப் பெற்று தன்னைத் தானே மருத்துவராகவும் அடையாளப்படுத்தி இயங்கி வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் சீமா எனும் பெயரில் குறித்த பெண் அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment