நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலம் பற்றிய இறுதி முடிவு மைத்ரியின் கையிலேயே இருக்கிறது என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கையளித்த போதிலும் அதில் மஹிந்த கையொப்பமிடவில்லை. இந்நிலையில், ரணிலின் எதிர்காலம் மைத்ரியின் கையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலசுகட்சியின் உதவியுடனேயே ரணில் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் சாத்தியம் எனவும் அதனால் மைத்ரியே இதன் இறுதி முடிவுக்குப் பொறுப்பாளியாவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment