நம்பிக்கையில்லாதோர் மீது தாக்குதல் தொடுக்க ஊக்குவிக்கும் வகையில் அல்-குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதாக அவ்வப்போது வெளி வரும் கருத்தியலின் அடிப்படையில் அவ்வாறான வசனங்களை நீக்கிவிட வேண்டும் என எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திடம் பிரான்சின் முக்கிய புள்ளிகளால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலை நிர்வாகம் முற்றாக நிராகரித்துள்ளது.
வலிந்து தாக்குதவதற்காகவன்றி பாதுகாப்பையே குறித்த வசனங்கள் எடுத்துரைத்துள்ளன என்பதை மீண்டும் தெளிவு படுத்திய பல்கலை நிர்வாகம், இஸ்லாமோபோபியா பாதிப்பினால் அவ்வப்போது இவ்வாறான சர்ச்சைகள் உருவாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சாதாரண மனிதன் ஒருவன் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரே காரணத்துக்காகத் தாக்க வேண்டும் என அல்-குர்ஆன் எங்கும் கூறவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ள அல்-அஸ்ஹர், முக்கிய நபர்கள் இவ்வாறான பேச்சுக்களை வெளியிடுவது முறுகலைத் தோற்றுவிக்க ஏதுவாக அமைகிறது எனவும் தெரிவித்துள்ளது.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகலஸ் சர்க்கோய் மற்றும் முன்னாள் பிரதமர் மனுவல் வலஸ் ஆகியோர் இணைந்து பகிரங்க கடிதம் ஒன்றை பிரசுரித்திருந்ததற்கே இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
கோழைத்தனத்தை வெறுக்கும் இறைவன் அதனைவிட அநீதியை வெறுக்கிறான்.
வலிந்து தாக்குவதற்காக அன்றி யுத்தம் என்று வரும்போது தம் தற்பாதுகாப்புக்காக தாக்குதலை ஊக்குவிக்கும் புனித குர்ஆன், அதில் விசுவாசிகளின் உயிர்களுக்குப் பதிலாக சுவர்க்கத்தையே பரிசாக தருவதாக வாக்களித்திருக்கிறான்.
தாக்குதல் பற்றிய வசனங்களின் முன் பின் வசனங்களை தொடர்பு படுத்தி வாசிப்போர் இதனைத் தெளிவாக அறிந்து கொள்வர்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓர் அட்சரம் கூட மாற்றமில்லாது இருக்கும் இந்த புனித குர்ஆன் பற்றி அதனை அருளிய அரசர்களுக்கெல்லாம் அரசனாகிய அல்லாஹ் இவ்விதம் கூறுகின்றான்:
"நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்."
(அல்குர்ஆன் : 15:9)
www.tamililquran.com
இதனை விட அதன் நம்பகத் தன்மைக்கு வேறு சாட்சியங்களும் வேண்டுமா?
ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்நாளில் ஆகக் குறைந்தது ஒரே ஒரு முறையேனும் பொருள் விளங்கி முழுமையாகப் படிக்க வேண்டிய அற்புதமான போதனைகள் அவை!
Post a Comment