பிணை நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் சிறையிலடைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே இன்று மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது கடவுச்சீட்டு உயர் நீதிமன்றின் பொறுப்பில் இருப்பதற்கான ஆவணங்களைக் காண்பிக்கத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த, இன்று அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து விடுதலையாகியுள்ளார்.
கரம் போர்ட் கொள்வனவின் பின்னணியிலான 39 மில்லியன் ரூபா மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்தானந்தவிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment