12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜனவரியில் கஷ்மீர், கத்துவா பகுதியில் சிறுமி ஆஷிபா இவ்வாறு வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் அதனை இனவாத விவகாரமாக்கி காமுகர்களைக் காப்பாற்ற இந்த்துவா வாதிகள் போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இதன் பின்னணியில் பல்வேறு சிறுவர் பாலியல் வன்புனர்வு சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment