நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டுள்ள போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் நிபந்தனைகளின் பேரிலேயே ஆதரிவித்துள்ள நிலையில் ஏனைய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அதேவேளை தமது கட்சிக்காரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் ரணில் எதிர்நோக்கும் இரு வேறு சவால்கள் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ளவும் ரணில் தயாரில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment