கோத்தாவை தண்டிக்க அரசுக்கு முதுகெலும்பில்லை: மேர்வின் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

கோத்தாவை தண்டிக்க அரசுக்கு முதுகெலும்பில்லை: மேர்வின்


வெள்ளை வேன் கடத்தல்காரன் கோத்தபாய ராஜபக்சவை தண்டிக்க அரசுக்கோ அரசிலிருக்கும் எவருக்குமோ முதுகெலும்பில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


மீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கு பல்வேறு வழிகளில் முயன்று கொண்டிருக்கும் மேர்வின் சில்வா நிதி மோசடி விசாரணைப் பிரிவு இவ்விகாரத்தில் அடங்கிப் போய் இருப்பதாகவும் யாருக்குமே முதுகெலும்பில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின் முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னணியில் கோத்தபாயவே இருப்பதாக மேர்வின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment