கடும் மழை பெய்து வரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆங்காங்கு சீலிங் பகுதிகள் கழன்று விழும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் தொடர்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமையும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் மூன்று குடிவரவு அதிகாரிகள் பணியிடங்கள் திருத்த வேலைகள் நிறைவுறும் வரை மூடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கிகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் இவ்வாறு ஆங்காங்கு நிகழ்வதாகவும் விமான நிலைய நிர்வாகம் இது குறித்து கவனமெடுக்கத் தவறி வருவதுடன் நிரந்தரமான தீர்வைக் காணாதிருப்பதாகவும் அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment