பிரதமர் ரணிலுக்காக கல்முனையில் பிராத்தனை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 April 2018

பிரதமர் ரணிலுக்காக கல்முனையில் பிராத்தனை!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர் அணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோக்கடிக்கப்பட்டு நாட்டைப்பற்றியும் நாட்டின் தூரநோக்கான அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கு இடையேயான ஒற்றுமை போன்றவற்றை தொடர்ந்து கொண்டுசெல்ல அவரது ஆயுளை நீட்டித்தரக்கோரியும் உருக்கமான துஆ பிராத்தனை, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தலைமையகத்தில் கல்முனை அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.றஸ்ஸாக் தலைமையில் 2018-04-03 ஆம் திகதி இடம்பெற்றது.

அல் ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம்.றியாஸ் (அல்தாபி) அவர்கள் துஆ பிராத்தனையை நிகழ்த்தினார்.,அஷ்செய்க் ஏ.சி.எம்.முகைதீன் (மன்பாயி) அஷ்செய்க் எஸ்.எச்.எம்.இம்தியாஸ் (பாதுபி) இணைந்திருந்த இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான நடராசா நந்தினி,கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி ஆகியோரும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் ஏ.யூசூப் லெப்பையும் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைப் பிரதேச  கொள்கைபரப்புச் செயலாளர் அஸ்வான் சக்கப் மௌலானா உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment