மே தினத்தை, இவ்வருடம் மே 7ம் திகதி அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தனியாக மேதின நிகழ்வொன்றை நடாத்தத் தீர்மானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலை ஆதரித்தவர்களுடன் இணையவும் முடியாது மஹிந்த ராஜபக்ச அணியுடன் சேரவும் முடியாது எனும் நிலையில் இவ்வாறான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த நபர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் தமது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment