இலங்கை நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் தினேஷ் குணவர்தன.
மஹிந்த ஆதரவாளரான தினேஷ் நாடாளுமன்றில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தவராவார். இந்நிலையில் பிரதமர் பதவியைக் குறி வைத்து மஹிந்த அணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்றதனையடுத்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறி வைக்கப்படுகிறது.
பிரதமர் பதவிக்குத் தயாராக இருந்த நிமல் சிறிபால டிசில்வா தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ஆதரவாளர்களைத் தயாராகுமாறும் அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment