நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிக்க உதவிய மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க போன்றோர் கரும்புள்ளிகளாகவே வரலாற்றில் அறியப்படுவர் என தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.
எதிர்கால வரலாறு அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்களாகவே பார்க்கும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் மிகவும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கையளித்திருந்ததுடன் தமக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் குழுவும் வாக்களிக்கும் என நம்பியிருந்தனர். எனினும் 46 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment