தாயார் எச்.ஐ.வி தாக்கத்துக்குள்ளானதைக் காரணங் காட்டி பாடசாலையில் கல்வி நடவடிக்கையைத் தொடர முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட போராட்டத்தின் பயனாக குறித்த மாணவிக்கு தேசிய பாடசாலையொன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினை நேரடியாக சந்தித்து இது தொடர்பில் பேசியதன் பயனாக இம்முடிவு கிடைத்துள்ளது.
இதேவேளை, தொடர்ந்தும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று வந்த குழந்தையின் கல்விக்க இடையூறு விளைவித்த முன்னைய பாடசாலையின் அதிபருக்கும் கல்வியமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment