நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரளயம் செய்து வருவதோடு அமைச்சரவைக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ள நிலையில் அரசை விட்டு விலக விரும்பும் சு.க உறுப்பினர்கள் தமது சுய விருப்பில் விலகிக் கொள்ளத் தடையேதுமில்லையென தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த 16 பேரும் பதவி நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி சொன்னால் தாம் பதலி விலகப் போகிறோம் என தெரிவிக்கும் குரூப் 16, அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
இந்நிலையிலேயே மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment