அண்மையில் இடம்பெற்ற நிதஹஸ் கோப்பை கிரிக்கட் போட்டியால் இலங்கை கிரிக்கட்டுக்கு 900 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் திலங்க சுமதிபால.
திலங்க சுமதிபாலவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனும் கோசம் மீண்டும் எடுந்துள்ள நிலையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. தற்போது தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சைக் கைவிட்டுள்ள நிலையில் அர்ஜுன ரணதுங்க கிரிக்கட் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையிலேயே தமது பதவிக்காலத்தில் இவ்வாறு பொருளாதார ரீதியாக இலாபமடைந்திருப்பது குறித்து திலங்க தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment